என்ன ஒரு சிந்தனை ?
யானை மேல
ஆள் உட்கார்ந்தால் RIDE
ஆனா,
ஆளு மெல யானை
உட்கார்ந்தா DIED
இன்றைய தத்துவம்
மண்டை உடையாம இருக்க
ஹெல்மெட் போடலாம்
ஆனா,
ஹெல்மெட் உடையாம இருக்க
மண்டையப் போட முடியுமா ?
எங்க போயி முட்டிக்கிறது ?
எக்ஸாம்ல ஃபெய்ல் ஆகிட்டா
திரும்ப படிச்சு பாஸ் பண்ணலாம் .
ஆனா, பாஸ் ஆகிட்டா
திரும்ப படிச்சு ஃபெய்ல் ஆக முடியுமா ?
- இப்படிக்கு செவத்துல முட்டி முட்டி யோசிப்போர் சங்கம்
இன்றைய தத்துவம்
பவர் கிளாஸை ,
என்னதான் ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தாலும்
அது கூலிங் கிளாஸ் ஆகாது
- கூலிங் கிளாஸ் போட்டு யோசிப்போர் சங்கம்
கூலிங் கிளாஸ் போட்டு
பவர் ரேஞ்சர்ஸ் பார்த்தாலும்
அது பவர் கிளாஸ் ஆகாது .
- பவர் கிளாஸ் போட்டு யோசிப்போர் சங்கம்
இன்றைய தத்துவங்கள் ...
1) சன்டே ஆனா ஜாலியா சண்டை போடலாம் ,
அதுக்காக,
மன்டே ஆனா ஜாலியா மண்டையப் போட முடியாது
2) போலீஸ் ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டால் போலீஸ் வரும் ,
ரயில்வே ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டா ரயில் வருமா ?
3) குளவி கொட்டினா வலிக்கும் .
தேள் கொட்டினா கூட வலிக்கும் .
ஆனா
முடி கொட்டினா வலிக்குமா ?
- தத்துவ ரீதியாக மட்டுமே யோசிப்போர் சங்கம்
இன்றைய தத்துவம்
Tea மாஸ்டர் என்னதான் லைட்டா Tea போட்டாலும்
அதுலயிருந்து வெளிச்சம் வராது .
- இது ஒரு சங்கம் சேராத தத்துவம் !!!
இன்றைய தத்துவம்
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
- தீவிரமாக யோசிப்போர் சங்கம் ( எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )
இன்றைய தத்துவம் ...
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம் .
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் .
ஆனா,
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா ?
- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
இன்றைய தத்துவம்
என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை .
இன்றைய தத்துவம்
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க ! குவாட்டர் கூட வராது !!!
இன்றைய தத்துவம்
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் ,
ஹீரோ ஹோன்டா , ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் ,
லேடீஸ் ஃபிங்கர் , ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!
புத்தாண்டு சிறப்பு தத்துவம்
டிசம்பர் 31 க்கும் ,
ஜனவரி 1 க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால்,
ஜனவரி 1 க்கும் ,
டிசம்பர் 31 க்கும் ,
ஒரு வருசம் வித்தியாசம் .
இதுதான் உலகம் .
இன்றைய தத்துவம்
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் .
ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??
யோசிக்கனும்...!!
இன்றைய தத்துவங்கள் !!!
தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா ?
தத்துவம் 2:
ஆட்டோக்கு ' Auto ' ன்னு பேர் இருந்தாலும் ,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .
தத்துவம்3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !
( என்ன கொடுமை சார் இது !?!)
தத்துவம்4:
வாழை மரம் தார் போடும் ,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது !
( ஹலோ ! ஹலோ !!!!)
தத்துவம்5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா ?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா ?
( டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)
( ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)
இன்றைய தத்துவம்
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது ,
கடன் வாங்கித்தான் ஆகனும் .
இன்றைய தத்துவம்
கொலுசு போட்டா சத்தம் வரும் .
ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?
இன்றைய தத்துவம்
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும் ,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் உலகம்
இன்றைய தத்துவம்
T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?
Enathu Pakkangal
Welcome to my blog. Treat this as your web page and feel the best things in the world.
Tuesday, August 17, 2010
Saturday, October 24, 2009
Aadhavan Vimarsanam
இன்று நண்பர்கள் அனைவரும் ஆதவன் படம் ஐமாக்ஸ்யில் பார்த்தோம். சரி எல்லாரும் ப்லாக் போடறாங்களே! நாமளும் போடுவம்னு எழுதின விமர்சனம்...
படமா இது... பப்படம். படம் பார்க்க போகும்போது நண்பர் சொன்னார் "நேத்து பூரா ஒரே தலை வலிடா. காலைலதான் சரி ஆச்சு. படம் புக் பண்ணினாயேன்னு வறேன்னர்". ஐயோ பாவம் அவர்! இன்னைக்கு தூங்கினப்போலதான்...
படத்தோட கதையா... சூர்யா கில்லர் ஹீரோ... ரோட்ல வரவன் போறவனையெல்லாம் சுடரார். பாரின் போய், யூரின் போய்ட்டே சுடறார். லெப்ட்ல சுடறாராம், ரைட்ல சுடறாராம்...(ஏம்பா இப்டி?) சாயாஜி அவரோடா அப்பா, அண்ணன் ஆனந்த் பாபு (யோவ்! ஏன்யா உனக்கு இந்த ஆசை? ) ஒரு பெரிய்ய கொலை குடும்பம்... சின்ன சின்ன கொலை பண்ணிட்டு இருந்தவங்களை, ஜட்ஜை கொல்ல சூர்யா போறார். அங்க குடும்பம்...
குடும்பத்துல ரெண்டு ஹீரோயின்... என்ன! மொத ஹீரோயின் சரோஜா தேவி அம்மா நயன்தாராவைவிட கொஞ்சம் இளமையா தெரியறாங்க...
வடிவேலு (நீ இல்லாட்டி படம் பார்த்த காச நண்பர்கள் திருப்பி கேட்டிருப்பாங்க) வேலைக்காரராம்... சூர்யா மிரட்டல்ல சூர்யாவை மச்சான்னு சொல்லி வீட்டில் சேர்த்து வீட்டில் இருந்தே ஜட்ஜை கொல்ல முயற்சிக்க, அதை நயந்தாரா கண்டுபிடிக்க... சூர்யா தான் ஜட்ஜின் ஒரே பையன்னு போகுது கதை. க்ளைம்ஸ்யில் ஒரு பெரிய ட்விஸ்ட்... சூர்யா இது எல்லாத்தையும் அவர் அப்பாவை காப்பாத்த பண்றாராம்.
என்னத்தை சொல்ல... இந்த ப்லாக் எழுதும்போதே தெரியலையா... எவ்வளவு கடுப்புல எழுதுறேன்னு...
படமா இது... பப்படம். படம் பார்க்க போகும்போது நண்பர் சொன்னார் "நேத்து பூரா ஒரே தலை வலிடா. காலைலதான் சரி ஆச்சு. படம் புக் பண்ணினாயேன்னு வறேன்னர்". ஐயோ பாவம் அவர்! இன்னைக்கு தூங்கினப்போலதான்...
படத்தோட கதையா... சூர்யா கில்லர் ஹீரோ... ரோட்ல வரவன் போறவனையெல்லாம் சுடரார். பாரின் போய், யூரின் போய்ட்டே சுடறார். லெப்ட்ல சுடறாராம், ரைட்ல சுடறாராம்...(ஏம்பா இப்டி?) சாயாஜி அவரோடா அப்பா, அண்ணன் ஆனந்த் பாபு (யோவ்! ஏன்யா உனக்கு இந்த ஆசை? ) ஒரு பெரிய்ய கொலை குடும்பம்... சின்ன சின்ன கொலை பண்ணிட்டு இருந்தவங்களை, ஜட்ஜை கொல்ல சூர்யா போறார். அங்க குடும்பம்...
குடும்பத்துல ரெண்டு ஹீரோயின்... என்ன! மொத ஹீரோயின் சரோஜா தேவி அம்மா நயன்தாராவைவிட கொஞ்சம் இளமையா தெரியறாங்க...
வடிவேலு (நீ இல்லாட்டி படம் பார்த்த காச நண்பர்கள் திருப்பி கேட்டிருப்பாங்க) வேலைக்காரராம்... சூர்யா மிரட்டல்ல சூர்யாவை மச்சான்னு சொல்லி வீட்டில் சேர்த்து வீட்டில் இருந்தே ஜட்ஜை கொல்ல முயற்சிக்க, அதை நயந்தாரா கண்டுபிடிக்க... சூர்யா தான் ஜட்ஜின் ஒரே பையன்னு போகுது கதை. க்ளைம்ஸ்யில் ஒரு பெரிய ட்விஸ்ட்... சூர்யா இது எல்லாத்தையும் அவர் அப்பாவை காப்பாத்த பண்றாராம்.
என்னத்தை சொல்ல... இந்த ப்லாக் எழுதும்போதே தெரியலையா... எவ்வளவு கடுப்புல எழுதுறேன்னு...
Wednesday, July 1, 2009
கடந்த காலக் கவிதைகள்

உலகமே பொய்...
ஒப்புக்கொள்கிறேன்!
உன்னைத் தவிர
__________________________
நிஜத்தில் சொல்லப்போனால்....
உனக்காக, உன்னில்
உனக்கு மட்டும்
நான்
நானாய் இருக்கிறேன்...
___________________________
காணவில்லை!
என் காதலி அளித்த
முத்தத்தின் சுவடுகளை!
கண்டுபிடியுங்கள்...
முத்த சுவடுகளை!
அல்லது
என் காதலியை !
_____________________
இரு இதழுடன்
ரோஜா!
என்னவள்...
_____________________
முதல் கவிதை
எழுதப்பட்டது!
உன் விழி எனும்
பேனாவால்
என்
இதயப்பக்கத்தில்
____________________
அவள் இப்பவும்
அப்படித்தான்...
எதுவெனினும்
குத்திக் குத்தி
பேசுவாள்!
பெண் புத்தி
Pin புத்தி என்பது
இதுதானோ?
_____________________
நினைவு முட்களை
சுமந்து கொண்டே
உன்னை
சுற்றி வரும்
கடிகாரம்...
நான்!
______________________
தயவுசெய்து
எப்படியவது என்னை
உனக்குள்ளே
தொலைத்துவிடேன்!
______________________
அனைவருக்கும்
வெறும் எழுத்தும்
ககிதமுமாய் தெரியும்
என் எண்ணம்...
உனக்கு மட்டும் எப்படி
கவிதையாக?
______________________
என் உதட்டை
கடிப்பதற்காகவே
படைத்தானோ ஆண்டவன்
உனக்கு பற்கள்!
_____________________
ஒப்புக்கொள்கிறேன்!
உன்னைத் தவிர
__________________________
நிஜத்தில் சொல்லப்போனால்....
உனக்காக, உன்னில்
உனக்கு மட்டும்
நான்
நானாய் இருக்கிறேன்...
___________________________
காணவில்லை!
என் காதலி அளித்த
முத்தத்தின் சுவடுகளை!
கண்டுபிடியுங்கள்...
முத்த சுவடுகளை!
அல்லது

என் காதலியை !
_____________________
இரு இதழுடன்
ரோஜா!
என்னவள்...
_____________________
முதல் கவிதை
எழுதப்பட்டது!
உன் விழி எனும்
பேனாவால்
என்
இதயப்பக்கத்தில்
____________________
அவள் இப்பவும்
அப்படித்தான்...
எதுவெனினும்
குத்திக் குத்தி
பேசுவாள்!
பெண் புத்தி
Pin புத்தி என்பது
இதுதானோ?
_____________________
நினைவு முட்களை
சுமந்து கொண்டே
உன்னை

சுற்றி வரும்
கடிகாரம்...
நான்!
______________________
தயவுசெய்து
எப்படியவது என்னை
உனக்குள்ளே
தொலைத்துவிடேன்!
______________________
அனைவருக்கும்
வெறும் எழுத்தும்
ககிதமுமாய் தெரியும்
என் எண்ணம்...
உனக்கு மட்டும் எப்படி
கவிதையாக?
______________________
என் உதட்டை
கடிப்பதற்காகவே
படைத்தானோ ஆண்டவன்
உனக்கு பற்கள்!
_____________________
Sunday, June 21, 2009
Sunday, May 31, 2009
இதோ என் கவிதைகள் இந்த வலையின் விதைகளாய்...
மூன்று நாளாய்
உணவில்லை...
உடம்பை மறைக்க
உடையில்லை...
ஊர்முழுக்க புழுதியில் ஆடி...
சின்ன முள்
தெய்த்த வலி பற்றி
குறைகூறும் மகனிடம்
எப்படி சொல்ல
அவன்
தந்தை இறந்ததை...
________________________
காலை...
நான்கு பரோட்டா,
பக்கத்து ஊர்
பிள்ளையார் கோவில்...
மதியம்...
சிக்கன் பிரியாணி,
அரசு நடத்தும் பொருட்காட்சி...
மாலை...
ஆறு வடை,
அங்காடி தெரு...
இரவு...
நூடுல்ஸ்,
அடுத்த தெரு திரை அரங்கம்...
ஊரிலிருந்து உறவினர் வந்தால்
உல்லாசமாய் தான் இருக்கிறது!
நாளும் வேகமாய்
நகர்கிறது...
மனம் நிறைய மகிழ்ச்சி
நினைவுகளுடன் நான்...
அம்மா டாமி பாவம்!
இன்னைக்கு பூரா
சாப்பிடலை!
இது என் மகள்...
___________________
உணவில்லை...
உடம்பை மறைக்க
உடையில்லை...
ஊர்முழுக்க புழுதியில் ஆடி...
சின்ன முள்
தெய்த்த வலி பற்றி
குறைகூறும் மகனிடம்
எப்படி சொல்ல
அவன்
தந்தை இறந்ததை...
________________________
காலை...
நான்கு பரோட்டா,
பக்கத்து ஊர்
பிள்ளையார் கோவில்...
மதியம்...
சிக்கன் பிரியாணி,
அரசு நடத்தும் பொருட்காட்சி...
மாலை...
ஆறு வடை,
அங்காடி தெரு...
இரவு...
நூடுல்ஸ்,
அடுத்த தெரு திரை அரங்கம்...
ஊரிலிருந்து உறவினர் வந்தால்
உல்லாசமாய் தான் இருக்கிறது!
நாளும் வேகமாய்
நகர்கிறது...
மனம் நிறைய மகிழ்ச்சி
நினைவுகளுடன் நான்...
அம்மா டாமி பாவம்!
இன்னைக்கு பூரா
சாப்பிடலை!
இது என் மகள்...
___________________
Subscribe to:
Posts (Atom)

