இன்று நண்பர்கள் அனைவரும் ஆதவன் படம் ஐமாக்ஸ்யில் பார்த்தோம். சரி எல்லாரும் ப்லாக் போடறாங்களே! நாமளும் போடுவம்னு எழுதின விமர்சனம்...
படமா இது... பப்படம். படம் பார்க்க போகும்போது நண்பர் சொன்னார் "நேத்து பூரா ஒரே தலை வலிடா. காலைலதான் சரி ஆச்சு. படம் புக் பண்ணினாயேன்னு வறேன்னர்". ஐயோ பாவம் அவர்! இன்னைக்கு தூங்கினப்போலதான்...
படத்தோட கதையா... சூர்யா கில்லர் ஹீரோ... ரோட்ல வரவன் போறவனையெல்லாம் சுடரார். பாரின் போய், யூரின் போய்ட்டே சுடறார். லெப்ட்ல சுடறாராம், ரைட்ல சுடறாராம்...(ஏம்பா இப்டி?) சாயாஜி அவரோடா அப்பா, அண்ணன் ஆனந்த் பாபு (யோவ்! ஏன்யா உனக்கு இந்த ஆசை? ) ஒரு பெரிய்ய கொலை குடும்பம்... சின்ன சின்ன கொலை பண்ணிட்டு இருந்தவங்களை, ஜட்ஜை கொல்ல சூர்யா போறார். அங்க குடும்பம்...
குடும்பத்துல ரெண்டு ஹீரோயின்... என்ன! மொத ஹீரோயின் சரோஜா தேவி அம்மா நயன்தாராவைவிட கொஞ்சம் இளமையா தெரியறாங்க...
வடிவேலு (நீ இல்லாட்டி படம் பார்த்த காச நண்பர்கள் திருப்பி கேட்டிருப்பாங்க) வேலைக்காரராம்... சூர்யா மிரட்டல்ல சூர்யாவை மச்சான்னு சொல்லி வீட்டில் சேர்த்து வீட்டில் இருந்தே ஜட்ஜை கொல்ல முயற்சிக்க, அதை நயந்தாரா கண்டுபிடிக்க... சூர்யா தான் ஜட்ஜின் ஒரே பையன்னு போகுது கதை. க்ளைம்ஸ்யில் ஒரு பெரிய ட்விஸ்ட்... சூர்யா இது எல்லாத்தையும் அவர் அப்பாவை காப்பாத்த பண்றாராம்.
என்னத்தை சொல்ல... இந்த ப்லாக் எழுதும்போதே தெரியலையா... எவ்வளவு கடுப்புல எழுதுறேன்னு...
Welcome to my blog. Treat this as your web page and feel the best things in the world.
Saturday, October 24, 2009
Wednesday, July 1, 2009
கடந்த காலக் கவிதைகள்

உலகமே பொய்...
ஒப்புக்கொள்கிறேன்!
உன்னைத் தவிர
__________________________
நிஜத்தில் சொல்லப்போனால்....
உனக்காக, உன்னில்
உனக்கு மட்டும்
நான்
நானாய் இருக்கிறேன்...
___________________________
காணவில்லை!
என் காதலி அளித்த
முத்தத்தின் சுவடுகளை!
கண்டுபிடியுங்கள்...
முத்த சுவடுகளை!
அல்லது
என் காதலியை !
_____________________
இரு இதழுடன்
ரோஜா!
என்னவள்...
_____________________
முதல் கவிதை
எழுதப்பட்டது!
உன் விழி எனும்
பேனாவால்
என்
இதயப்பக்கத்தில்
____________________
அவள் இப்பவும்
அப்படித்தான்...
எதுவெனினும்
குத்திக் குத்தி
பேசுவாள்!
பெண் புத்தி
Pin புத்தி என்பது
இதுதானோ?
_____________________
நினைவு முட்களை
சுமந்து கொண்டே
உன்னை
சுற்றி வரும்
கடிகாரம்...
நான்!
______________________
தயவுசெய்து
எப்படியவது என்னை
உனக்குள்ளே
தொலைத்துவிடேன்!
______________________
அனைவருக்கும்
வெறும் எழுத்தும்
ககிதமுமாய் தெரியும்
என் எண்ணம்...
உனக்கு மட்டும் எப்படி
கவிதையாக?
______________________
என் உதட்டை
கடிப்பதற்காகவே
படைத்தானோ ஆண்டவன்
உனக்கு பற்கள்!
_____________________
ஒப்புக்கொள்கிறேன்!
உன்னைத் தவிர
__________________________
நிஜத்தில் சொல்லப்போனால்....
உனக்காக, உன்னில்
உனக்கு மட்டும்
நான்
நானாய் இருக்கிறேன்...
___________________________
காணவில்லை!
என் காதலி அளித்த
முத்தத்தின் சுவடுகளை!
கண்டுபிடியுங்கள்...
முத்த சுவடுகளை!
அல்லது

என் காதலியை !
_____________________
இரு இதழுடன்
ரோஜா!
என்னவள்...
_____________________
முதல் கவிதை
எழுதப்பட்டது!
உன் விழி எனும்
பேனாவால்
என்
இதயப்பக்கத்தில்
____________________
அவள் இப்பவும்
அப்படித்தான்...
எதுவெனினும்
குத்திக் குத்தி
பேசுவாள்!
பெண் புத்தி
Pin புத்தி என்பது
இதுதானோ?
_____________________
நினைவு முட்களை
சுமந்து கொண்டே
உன்னை

சுற்றி வரும்
கடிகாரம்...
நான்!
______________________
தயவுசெய்து
எப்படியவது என்னை
உனக்குள்ளே
தொலைத்துவிடேன்!
______________________
அனைவருக்கும்
வெறும் எழுத்தும்
ககிதமுமாய் தெரியும்
என் எண்ணம்...
உனக்கு மட்டும் எப்படி
கவிதையாக?
______________________
என் உதட்டை
கடிப்பதற்காகவே
படைத்தானோ ஆண்டவன்
உனக்கு பற்கள்!
_____________________
Sunday, June 21, 2009
Sunday, May 31, 2009
இதோ என் கவிதைகள் இந்த வலையின் விதைகளாய்...
மூன்று நாளாய்
உணவில்லை...
உடம்பை மறைக்க
உடையில்லை...
ஊர்முழுக்க புழுதியில் ஆடி...
சின்ன முள்
தெய்த்த வலி பற்றி
குறைகூறும் மகனிடம்
எப்படி சொல்ல
அவன்
தந்தை இறந்ததை...
________________________
காலை...
நான்கு பரோட்டா,
பக்கத்து ஊர்
பிள்ளையார் கோவில்...
மதியம்...
சிக்கன் பிரியாணி,
அரசு நடத்தும் பொருட்காட்சி...
மாலை...
ஆறு வடை,
அங்காடி தெரு...
இரவு...
நூடுல்ஸ்,
அடுத்த தெரு திரை அரங்கம்...
ஊரிலிருந்து உறவினர் வந்தால்
உல்லாசமாய் தான் இருக்கிறது!
நாளும் வேகமாய்
நகர்கிறது...
மனம் நிறைய மகிழ்ச்சி
நினைவுகளுடன் நான்...
அம்மா டாமி பாவம்!
இன்னைக்கு பூரா
சாப்பிடலை!
இது என் மகள்...
___________________
உணவில்லை...
உடம்பை மறைக்க
உடையில்லை...
ஊர்முழுக்க புழுதியில் ஆடி...
சின்ன முள்
தெய்த்த வலி பற்றி
குறைகூறும் மகனிடம்
எப்படி சொல்ல
அவன்
தந்தை இறந்ததை...
________________________
காலை...
நான்கு பரோட்டா,
பக்கத்து ஊர்
பிள்ளையார் கோவில்...
மதியம்...
சிக்கன் பிரியாணி,
அரசு நடத்தும் பொருட்காட்சி...
மாலை...
ஆறு வடை,
அங்காடி தெரு...
இரவு...
நூடுல்ஸ்,
அடுத்த தெரு திரை அரங்கம்...
ஊரிலிருந்து உறவினர் வந்தால்
உல்லாசமாய் தான் இருக்கிறது!
நாளும் வேகமாய்
நகர்கிறது...
மனம் நிறைய மகிழ்ச்சி
நினைவுகளுடன் நான்...
அம்மா டாமி பாவம்!
இன்னைக்கு பூரா
சாப்பிடலை!
இது என் மகள்...
___________________
Subscribe to:
Posts (Atom)

